கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்து படத்தின் நடிப்பேன்’ என சூர்யா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கௌதம் மேனன் இயக்குவதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்காமல் சூர்யா விலகியது அனைவருக்கும் தெரிந்ததே. ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ என்ற இரு பெரிய வெற்றிகளைக் கொடுத்த இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என உண்மையான காரணம் தெரியாமலே இருந்தது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா கௌதம் மேனனுடன் இணைந்து அடுத்த வருடம் நடிப்பேன் என்று சொன்னார்.
ஆனால், அவர் பேசும் போது கௌதம் மேனனின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. மறைமுகமாகவே பேசினார். அவர் பேசியதாவது,
“More than work, more than profession, நான் சமீபத்துல ஒரு முடிவெடுத்தேன். நல்ல உறவுகள் பாதிக்கப்படக் கூடாதுன்னு சமீபத்துல ஒரு முடிவு எடுத்தேன். அந்த உறவு பிரியாது, அந்த உறவு நிச்சயமாக இருக்கும். அடுத்த வருஷம் மீண்டும் ஒரு சிறந்த படத்தோட நான் வந்து உங்களை சந்திப்பேன். அதுக்காக எடுத்த ஒரு இடைவெளியுடன் கூடிய முடிவுதான் அது. ரெண்டு பேருக்குமே ஒருத்தக்கொருத்தர் மரியாதை இருக்கு,” என்றார் சூர்யா.
இதன் மூலம் கௌதம் மேனன் – சூர்யா பிரிவு ஒரு தற்காலிகமான பிரிவுதான் எனத் தெரிய வருகிறது.
சூர்யாவின் வெளிப்படையான அறிவிப்பால் இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்ததாகவே கருதலாம்.