அண்ணனை எதிர்க்கப் போகிறாரா தம்பி…

chiranjeevi-brothers2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அரசியல் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்பதை இப்போதே சொல்லி விட முடியாது.

ஆனாலும், நிச்சயம் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த மாற்றம் ஆந்திர அரசியலில் கொஞ்சம் அதிகமாகவே வீசும் எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும், சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாத அளவிற்கு பல திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

தற்போதைய ஆந்திர பரபரப்பு, அண்ணனை எதிர்த்து தம்பி களம் இறங்ககுவாரா என்பதே…

அண்ணன் – மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை ஆரம்பித்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டவர்.

தம்பி – பவர் ஸ்டார் பவன் கல்யாண். அவ்வப் போது தோல்விளைக் கொடுத்தாலும், ஒரு ஹிட் கொடுத்தார் என்றால் அது ஆந்திராவையே கலக்கி விடும்.

இவருடைய சமீபத்திய ஹிட்டான ‘அத்தாரின்டிக்கி தரேதி’ வசூல் ரீதியான பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. இது அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.

சமீப காலமாகவே அண்ணன் , தம்பிகளான சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் எதிரெதிர் துருவங்களாக மாறி வருகிறார்கள் என அரசல், புரசலாகப் பேசப்பட்டும் வருகிறது.

கடந்த சில நாட்களாக பவன் கல்யாண், நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து விடுவார் என்று மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஏற்கெனவே, தெலுங்கானா பிரச்சனையால் சிக்கலுக்குள்ளாகியிருக்கும் ஆந்திராவில், அதிகமான ரசிகர்களை தங்களது பக்கம் வைத்துள்ள சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் ஆந்திர அரசியலிலும் ஏதாவது அதிரடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என நமது ஆந்திர நண்பர் தெரிவிக்கிறார்…

Read Previous

‘ஆரம்பம்’ படத்தைப் பார்த்து பாராட்டிய அஜித்…

Read Next

நடிப்பை விட்டு படிக்கப் போகும் நடிகை…