நடிப்பை விட்டு படிக்கப் போகும் நடிகை…

richa‘மயக்கம் என்ன’, ‘ஒஸ்தி’ என்ற இரண்டு தோல்விப் படங்களில் ஒரே நேரத்தில் நடித்தால் தமிழ் சினிமா எப்படி தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கும்.

படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை யார் யாரோ அனுபவிப்பார்கள். ஆனால், தோல்வியடைந்தால் சம்பந்தமேயில்லாமல் யார் மீதோ குறை சொல்லிவிடுவார்கள்.

அப்படித்தான் ஆகிப் போனது மேற் சொன்ன படங்களில் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாவுக்கு.

அழகாக இருந்தாலும் தோல்விப் படங்கள் அவருடைய வளர்ச்சியை தமிழ் சினிமாவில் பாதிக்க வைத்தாலும், தெலுங்கில் வெற்றிப் படங்களைக் கொடுக்க வைத்தது.

இருந்தாலும், நடிப்பை விட்டு விட்டு அமெரிக்காவிற்கு படிக்கப் போகிறாராம் ரிச்சா.

இது பற்றி அவர் கூறுகையில், “இப்போது முன்னணி நடிகையாக இருந்தாலும், ஒன்றுக்கு பல முறை யோசித்தே, இந்த முடிவை எடுத்திருக்கிறேன். படிப்பை முடித்து விட்டு மீண்டும் நடிக்க வருவேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் என் நன்றி” என்று கூறியுள்ளார் ரிச்சா.

என்ன ஆச்சு, ரிச்சா ….?

Read Previous

அண்ணனை எதிர்க்கப் போகிறாரா தம்பி…

Read Next

சிம்பு – பாண்டிராஜ் படம் இன்று ஆரம்பம்…