சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், நேசன் இயக்கத்தில், இமான் இசையைமப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜில்லா’.
இந்த படத்தில் இமான் இசையமைப்பில் வைரமுத்து எழுதிய ஒரு பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருக்கிறார் விஜய்.
“இது ஒரு இனிமையான மெலடி பாடல்,” என்கிறார் இமான்.
விஜய் நடித்து இமான் இசையமைத்து வெளிவந்த ‘தமிழன்’ படத்தில் விஜய் பாடிய ‘உள்ளத்தைக் கிள்ளாதே….’ பாடல் அப்போது சூப்பர் ஹிட்டான பாடல்.
ஆரம்ப காலங்களில் தான் நடிக்கும் படங்களில் பாடி வந்த விஜய், அதன் பின்னர் பாடுவதை நிறுத்தி விட்டார்.
‘துப்பாக்கி’ படத்தில் அவர் பாடிய ‘கூகுள் கூகுள்..’ மற்றும் ‘தலைவா’ படத்தில் பாடிய ‘வாங்கண்ணா…’ பாடலும் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து இந்த படத்திலும் விஜய் பாடியிருக்கிறார்.
அடுத்து அவர் நடிக்கும் ஏ.ஆர். முருகதாஸ் படத்திலும், விஜய்யை கண்டிப்பாகப் பாடவைப்பேன் என அந்த படத்திற்கு இசையமைக்கும் அனிருத் கூறியுள்ளார்.
‘வாங்கண்ணா…வணக்கங்கண்ணா…’, ‘வந்து பாடுங்க பாடுங்கண்ணா…’.