இதுதான் எனக்கு தலை தீபாவளி – கார்த்தி

azhaguraja_00007இந்த தீபாவளிதான் கார்த்திக்கு நிஜமான தலை தீபாவளி. இந்த தீபாவளிக்குத்தான் அவர் நடித்த “ஆல் இன் ஆல் அழகு ராஜா” வெளியாகிறது.

அவருக்கு முதல் தீபாவளி படம் இதுதான்.

எனவே முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த ஆண்டு தீபாவளியை எதிர் கொள்கிறார் கார்த்தி.

“நான் எத்தனையோ தீபாவளியை பார்த்திருக்கிறேன்.இந்த தீபாவளி எனக்கு நிச்சயமாக ஸ்பெஷல்தான். இப்போதுதான் இந்த ஆண்டு தான் எனக்கு தீபாவளி ரிலீஸ் படம் வருகிறது. அதனால் மனசுக்குள் எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பற்றி கார்த்தி கூறும் போது
சமீப நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் கார்த்தி. விஷ ஜுரத்திலிருந்து இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார்.

தீபாவளிக்கு வெளிவரவுள்ள படமான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பற்றி கேட்க ஆரம்பித்து விட்டாலே உடல் சோர்வை மறந்து மனதில் உற்சாகம் சிறகடிக்க பேசத் தொடங்கி விடுகிறார்.
“அது ஒரு மறக்க முடியாத படம். ஜாலியான அனுபவம். உற்சாகமான எனெர்ஜி கொடுத்த எக்ஸ்பீரியன்ஸ்” என்று ஒபெனிங் கொடுக்கிறார்.

“நானும் ராஜேஷும் சந்தித்தபோது நகரம் சம்பந்தப்பட்ட கதை வேண்டாம். கிராமத்துப் பக்கம் போவோம் என்று விரும்பினோம்.

அது சற்று வளர்ந்த ஊர். ஸ்மால் டவுன் என்று கூறலாம். அதன்படி கதையின் பெரும்பகுதி அம்பாசமுத்திரத்தில் நடக்கிறது.
அங்கே ‘ஆல் இன் ஆல்’ என்கிற லோக்கல் சேனல் நடத்தும் அழகுராஜா தான். இந்த அழகுராஜா தன்மீது அதிகமாக நம்பிக்கை வைத்து அலைபவன். அந்த லோக்கல் சேனலை சன்டிவிக்கு போட்டியாக கருதி வளர்த்து வருகிறான் என்றால் பாருங்களேன்.

அப்பா பிரபு சார். அம்மா சரண்யா. இவர்களின் ஒரே மகன் தான் அழகுராஜா, ஒரே பிள்ளை என்றால் செல்லம், திமிர், அதீத நம்பிக்கை, பிடிவாதம் எல்லாம் இருக்கும் தானே…? அதுதான் பிரச்சினையே..?

சேனல் நடத்தினாலும் அவனுக்கும் நட்பு உலகம், காதல் உலகம் இருக்கிறது. நண்பன் சந்தானம். அவர்தான் அழகுராஜாவின் உதவியாளர். அசிஸ்டெண்ட் வேலை என்கிற பெயரில் சில அடமண்ட் வேலையும் செய்பவர். இதனால் ஒருவரை ஒருவர் நாங்கள் காலை வாரி விடுவதுண்டு.

சித்ராதேவிபிரியா, இந்த பெயர் தான் காஜல்அகர்வாலுக்கு. அந்த பெயருக்குரிய காரணமே கலகலப்பு. காஜல்அகர்வால் கேரக்டரே வித்யாசமானது. வெறும் அலங்கார ஹீரோயினாக வராமல் நிறைய இடங்களில் நடிக்க வாய்ப்பு உள்ள வேடம்.

பிரபு சார் என் செல்ல அப்பா, நான் அவரைப்போல கெட்டப்பிலும், செட்டப்பிலும் நடிக்கிற மாதிரி காட்சி வரும். அப்படி நடிக்க படாத பாடுபட்டேன். ஒருவரை போல நடிக்கிறது ரொம்பவும் சிரமம் என்று புரிந்தது. சிறுவயதில் நான் ஊட்டி, கொடைக்கானலில் பிரபு சாரின் படபிடிப்பைப் பார்த்ததுண்டு. அவருடன் சேர்ந்து நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

பாடல் காட்சிகளுக்கு வெளிநாடு போவது இல்லை என்பதில் முடிவாக இருந்தோம். நம்மூரில் இல்லாத அழகா… என்று நினைக்கும்படி நிறைய இடங்களில் எடுத்து இருக்கிறோம். நம் பொள்ளாச்சி, கும்பகோணம், அம்பாசமுத்திரம் அழகை படத்தில் பாருங்கள். பார்க்கிற மக்கள் எல்லாம் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிற அப்பாவி மனசுக்காரர்கள். இந்த வெளிப்புறம் படப்பிடிப்பு அனுபவம் ஜாலி ட்ரீம் போல இருந்தது நிஜம்.

இதற்கு முன் அவருடன் ‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்தேன். அப்போது நாங்கள் இருவருமே புதியவர்கள். அது எனக்கு 3-வது படம். இது எனக்கு 8வது படம்.ஆனால் இந்த நாலு வருஷத்தில் காஜல் 30 படங்களில் நடித்து விட்டார். எனவே அவரது அனுபவம் நடிப்பில் தெரிந்தது. படபிடிப்புக்கு முன்பு என்னதான் பேசப் போகிறோம். எப்படி நடிக்க போகிறோம் என்று நாங்கள் விவாதித்துக் கொள்வது உண்டு. இது வேலையை சுலபமாக்கியது.

இந்த மனுஷன் ராஜேஷுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். எந்த சிக்கலான சூழலுக்குள்ளும் சிரிப்பை கொண்டு வந்துவிடும் வித்தைக்காரர். இதில் நாயகன்,நாயகி என்று மட்டும் கதை போகாது. சுமார் எட்டு பாத்திரங்கள் மறக்க முடியாதபடி அமைந்திருக்கும். கோட்டா சீனிவாசராவ் ஜுவல்லரி முதலாளியாக வந்து, அவர்கூட சிரிக்க வைப்பார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ கவுண்டமணி சாரால் புகழ் பெற்றது. அவரை ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க முயற்சி செய்தோம்.முடியவில்லை.

நடிகர் நடிகைகள் செய்ய வேண்டிய ஹோம் ஒர்க்கைக் கூட ராஜேஷ் செய்து விடுவார். நான் நடிக்கும் லோக்கல் சேனல் பற்றி விவரம் தேடி நான் சிரமப்படவில்லை. அது சம்பந்தமான ஏராளமான தகவல்கள், சிடிக்கள் கொடுத்தார். என் சுமையை குறைத்தார்.

தமனின் இசையும், சக்திசரவணன் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும்.

‘இந்த விளம்பர உத்தி, உங்களை எங்கேயோ கொண்டு போகப்போகிறது.’ ‘த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்’ என்றெல்லாம் அடிக்கடி நானும் சந்தானமும் பேசுகிற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும்.

சிரிக்க வைக்கும்படி கலகலப்பு படமாக இருந்தாலும் செறிவான நிறைய காட்சிகளையும் வைத்திருக்கிறார் ராஜேஷ்,”என்று மூச்சு விடாமல் பேசி முடித்தார் கார்த்தி.

Read Previous

‘ஜில்லா’வில் விஜய் பாடினார்…

Read Next

சிறு வயதில் சூர்யாவை பிடிக்காது – கார்த்தி சிறப்புப் பேட்டி