பவன் கல்யாண், சமந்தா, பிரணீதா, நதியா நடிக்க திரிவிக்ரம் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து கடந்த மாதம் 27ம் தேதி வெளியான படம் ‘அத்தாரின்டிகி தரேதி’.
இந்த படம் இதுவரை 70 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துள்ளதாம். இந்த வார கடைசிக்குள் தெலுங்கிலேயே அதிகமாக வசூல் சாதனை புரிந்த ‘மகதீரா’ படத்தின் வசூலை முறியடித்து விடும் என்றும் சொல்கிறார்கள்.
தெலுங்கு திரைப்படத்திற்கேயுரிய கலகலப்பான படம் இது. இரண்டு ஹீரோயின்கள், அட்டகாசமான பாடல்கள், ரிச்சான மேக்கிங், என இந்த படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
படத்தின் கதை என்னவென்றால், இத்தாலியில் இருக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர் பொம்மன் இரானி. இவருடைய கம்பெனி பங்குகளை யாரோ குறுக்கு வழியில் வாங்கி வருவதைக் கண்டுபிடிக்கிறார். அந்த சூழ்நிலையில் இந்தியாவில் பண வசதியில்லாமல் கஷ்டப்படும் அவருடைய மகளான நதியாவை அழைத்து வரும்படி பேரனான பவன் கல்யாணிடம் சொல்கிறார்.
காதல் திருமணத்திற்கு அப்பா சம்மதிக்காததால் அப்பாவை விட்டு பிரிந்து சென்றவர்தான் நதியா.பவன் கல்யாணும், அத்தை நதியா வீட்டுக்குச் செல்கிறார். நதியாவிற்கு சமந்தா, ப்ரணீதா இருவரும் மகள்கள்.
இது போதாதா ஒரு கதையை கலகலப்பாக ரசிக்க வைப்பதற்கு.
இப்போது இந்த கதையின் தமிழ் உரிமைய வாங்குவதற்கும் சரியான போட்டி ஏற்பட்டுள்ளதாம்.
சும்மாவா…70 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த படமாயிற்றே…