அறிவியில் புனைவு படமாக உருவாகும் ‘நகல்’

S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், A.R. கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், உருவாக உள்ள படம் ‘நகல்’.

இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

புதுமையான கதையம்சத்துடன் அறிவியில் புனைவு (Science Fiction) படமாக இப்படம் உருவாக உள்ளது. சிவசக்தி நாயகனாக நடிக்க, மும்பை மாடல் ரிஷ்மா நாயகியாக நடிக்க உள்ளளார். இவர் பல குறும்படங்களில் நடித்தவர்.

பைசல் இசையமைக்க, சதுர்த்தி ஐயப்பன் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார். ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவு செய்ய ஸ்டன் சிவா சண்டைப் பயிற்சியை அமைக்க, மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலை இயக்குனர்களாக பணிபுரிகிறார்கள்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க முன்னணி நட்சத்திரங்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படபிடிப்பு துவங்கி 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. 75 சதவீத படப்பிடிப்பு சென்னையிலும், மீதி காட்சிகள் வெளிநாடுகளிலும் நடைபெற உள்ளது. மருத்துவம் சார்ந்த காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க உள்ளார்கள். பாடல்கள் ஊட்டியில் படமாக உள்ளளது.

இன்று நடைபெற்ற பட பூஜையில் இயக்குனர் சுப்பிரமணிய சிவா, நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read Previous

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – டிரைலர்

Read Next

எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என் அண்ணன் – ஜெயம் ரவி

Most Popular