கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா பற்றிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்ற வருடம் அவருக்கு ஏற்பட்ட சரும பாதிப்பு போலவே இப்போதும் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ரத்தானதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், தனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என சமந்தா தெரிவித்துள்ளார்.
“ஜுனியர் என்டிஆர் , விவி விநாயக் படங்களில் டிசம்பர் 20ம் தேதி வரை நடிக்கிறேன். அதன் பின் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரை சூர்யா – லிங்குசாமி படத்தில் நடிக்கிறேன். பொதுவாக நான் என்னுடைய ஷுட்டிங் ஷெட்டியூல் பற்றி ட்வீட் செய்ய மாட்டேன். ஆனால், நான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்ற என்னைப் பற்றிய வதந்திகளுக்காகவே இதை செய்கிறேன், ” என சமந்தா அவருடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சூர்யா – லிங்குசாமி படத்தில் டிசம்பர் 7ம் தேதி முதல் சமந்தா கலந்து கொள்ளப் போகிறார் என தயாரிப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சூர்யாவுடன் சமந்தா இணைந்து நடிக்கும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட உள்ளது.