ஆர்யா நடிக்கும் ‘மீகாமன்’…

settai_00011‘முன்தினம் பார்த்தேனே, தடையற தாக்க’ படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்து இயக்கும் படம் ‘மீகாமன்’.

இப்படத்தின் நாயகனாக ஆர்யா நடிக்கிறார். ஆர்யா ஜோடியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க உள்ளார். அதற்கான தேடல் நடைபெற்று வருகிறது.

‘மீகாமன்’ என்றால் ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று அர்த்தமாம்.

இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குனர் மகிழ்திருமேனி படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து  கொண்டார்.

“படம் முற்றிலும் கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது. நாயகிக்கான தேடல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு நல்ல தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ‘மீகாமன்’ என்று பெயர் வைத்துள்ளோம். எனது முந்தைய படங்களும் தமிழ்ப் பெயரில்தான் வைக்கப்பட்டன.

‘மீகாமன்’ என்றால் பலருக்குப் புரியுமா என்பது சந்தேகம்தான். ‘மீகாமன்’ என்றால் கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று அர்த்தம். அழகான தமிழ்ப் பெயருக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்ல வேண்டியதாயிருக்கிறது,” என்றார்.

‘பேராண்மை, பூலோகம்’ படங்களின் ஒளிப்பதிவாளரான சதீஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். மோகனமகந்திரன் புரொடக்ஷன் டிசைனராகப் பணிபுரிகிறார்.

நேமிசந்த் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

டிசம்பர் 5ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. தொடர்ந்து கோவா, குஜராத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

நல்ல தமிழ்ப் பெயரை வைத்தற்காகவே இயக்குனருக்கு பாராட்டுக்கள்…

 

 

Read Previous

நான் நன்றாகத்தான் இருக்கிறேன்… – சமந்தா

Read Next

ஜன்னல் ஓரம் – விமர்சனம்

Most Popular