‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீதிவ்யா தற்போது, ‘பென்சில், ஈட்டி, வீர தீர சூரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக சுந்தர் .சி இயக்கவிருக்கும் ‘கலகலப்பு – பார்ட் 2’ படத்திலும் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘கலகலப்பு’ படத்தில் நடித்தவர்களில் அஞ்சலியைத் தவிர மற்றவர்கள் மீண்டும் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்களாம். ஆனால், அஞ்சலி நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்கப் போகிறார்.
இயக்குனர் சுந்தர்.சி, அஞ்சலியைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போகவேதான் இந்த மாற்றமாம்.
தன்னை வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை அஞ்சலி சுத்தமாக மறந்தே போய்விட்டார் என்கிறார்கள்.
இப்போது குடும்பப் பாங்கான ஹீரோயின் தேடுபவர்களுக்கு ஸ்ரீதிவ்யா தொடர்பு எல்லைக்குள் வந்துவிட, அஞ்சலியோ தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார்.