வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா…

surya-and-venkat-prabhu‘பிரியாணி’ படம் கொஞ்சம் தாமதாக வெளிவந்தாலும் அதைப் பற்றியெல்லாம வெங்கட்பிரபு எந்த வித வருத்தத்தையோ, மனக் கசப்பையோ வெளியிடவில்லை.

இப்போதுதான் அதற்கான காரணம் தெரிய வந்துள்து. லிங்குசாமி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறார்.

அது மட்டுமல்ல படத்தையும் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2 D’ நிறுவனம் மூலமே தயாரிக்கப் போகிறாராம் சூர்யா. இந்நிறுவனம் சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தை வெளியிட்டதன் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தது.

வெங்கட் பிரபு சொன்ன கதை சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். உடனே ஓகே சொல்லி விட்டாராம் சூர்யா.

“சென்னை-28, கோவா, சரோஜா, மங்காத்தா, பிரியாணி’ போன்றே இப்படத்தின் தலைப்பும் ஒரு வார்த்தையில்தான் இருக்கும் என்கிறார்கள்.

விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.

 

Read Previous

அஞ்சலி இடத்தைப் பிடித்த ஸ்ரீதிவ்யா…

Read Next

‘பன்ச்’ எல்லாம் இல்லீங்கண்ணா…