கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து இன்னும் இரண்டு நாட்களில் வெளிவர உள்ள படம் ‘பிரியாணி’.
இப்படத்திற்கு முன் கார்த்தி நடித்து வெளிவந்த ‘அழகுராஜா, சகுனி, அலெக்ஸ் பாண்டியன்’ மூன்று படங்களுமே தோல்விப் படங்களாகவே அமைந்தன.
‘பிரியாணி’ படத்திற்காக கார்த்தியும் கேரளா, ஆந்திரா என ஓடி ஓடி பிரமோஷன் செய்து வருகிறார். தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு அதே நாளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பிரமோஷனுக்காக ஆந்திர சினிமா நிருபர்களை சந்தித்திருக்கிறார் கார்த்தி.
அப்போது அவரிடம் முந்தைய படங்களின் தோல்வி பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது,
அதற்கு பதிலளித்த கார்த்தி, “கதை சொல்லும் போது நல்லாத்தான் சொல்றாங்க, ஆனால், படமாக்கும் போது அதை சரியா பண்ணாம விட்டுடறாங்க, ” என கூறியுள்ளார்.
கண்டிப்பா ‘பிரியாணி’ அந்த தப்பை பண்ணாது என நம்புவோம்…