இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று 27 டிசம்பர் 2013 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
விழா
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அசூர் என்டர்டெயின்மென்ட், ஜேவி மீடியா ட்ரீம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பாரதி பாலகுமாரன் இயக்கியிருக்கும் படம். இசை – ஜேம்ஸ் வசந்தன். மகேந்திரன், மாளவிகா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
புவனக்காடு
மலர் மீடியா தயாரிப்பில் வி.எம். மோகன் இயக்கத்தில் சரத்ப்ரியதேவ் இசையமைத்திருக்கும் படம். விக்னேஷ், திவ்யா நாகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இனி, அடுத்த வார புத்தாண்டில் 3ம் தேதி “அம்மா அம்மம்மா, நம்ம கிராமம், என் காதல் புதிது, அகடம், அத்திமலை முத்துப்பாண்டி, என் காதல் புதிது, கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு,” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
இதற்கடுத்த வாரம் 10ம் தேதி அஜித் நடிக்கும் ‘வீரம்’, விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
இந்த ஆண்டைப் போலவே அடுத்த ஆண்டும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

