எண்ணற்ற இனிமையான பாடல்களால் நம் அனைவரையும் கவர்ந்து வரும் நா.முத்துக்குமார் இந்த ஆண்டிலும் பல ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளார்.
அது மட்டுமல்ல அடுத்த ஆண்டிலும் வெளிவர இருக்கும் பல எண்ணற்ற பாடல்களை எழுதி வருகிறார்.
இது சம்பந்தமாக நா.முத்துக்குமார் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், “உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பாலும் ஆதரவாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ‘2013’ம் ஆண்டிலும் அதிக படங்கள் அதிக பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
2013 ம் ஆண்டு நான் ‘34’ படங்களில் ‘106’ பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் ‘10’ படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதியுள்ளேன். இந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்
இந்த ஆண்டில் நா.முத்துக்குமார் எழுதி ஹிட்டாகியுள்ள சில பாடல்கள்…
1. வாங்கண்ணா வணக்கங்கன்னா (தலைவா)
2. யார் இந்த சாலை ஓரம் (தலைவா)
3. தலைவா தலைவா (தலைவா)
4. தழிழ்ப்பசங்க (தலைவா)
5. ஆனந்த யாழை மீட்டுகிறாய் (தங்க மீன்கள்)
6. ஃபர்ஸ்ட்டு லாஸ்ட்டு (தங்க மீன்கள்)
7. நதி வெள்ளம் மேலே (தங்க மீன்கள்)
8. ஹே பேபி (ராஜா ராணி)
9. சில்லென ஒரு மழைத்துளி (ராஜா ராணி)
10. ஏ பெண்ணே பெண்ணே (வணக்கம் சென்னை)
11. காற்றில் ஏதோ (வணக்கம் சென்னை)
12. ஒரு பொறம்போக்கு (கேடி கில்லா கில்லாடி ரங்கா)
13. யாரோ இவன் யாரோ இவன் (உதயம் என்.எச்.4)
14. அழகோ அழகு (சமர்)
15. விழகளிலே (ஐந்து ஐந்து ஐந்து)
16. முதல் மழைக்காலம் (ஐந்து ஐந்து ஐந்து)
17. என்ன ஒரு என்ன ஒரு அழகியடா (பட்டத்து யானை)
18. என்ன மறந்தேன் (இவன் வேற மாதிரி)
19. யாருக்கும் சொல்லாம (ஆல் இன் ஆல் அழகுராஜா)
20. உன்னை பார்த்த நேரம் (ஆல் இன் ஆல் அழகுராஜா)
21. சித்ரா தேவிப்பிரியா (ஆல் இன் ஆல் அழகுராஜா)
22. வா மச்சி வா மச்சி (ஒன்பதுல குரு)
23. குறு குறு கண்ணாலே (வத்திக்குச்சி)
24. ஆஹா காதல் (மூன்று பேர் மூன்று காதல்)
25. ஸ்டாப் த பாட்டு (மூன்று பேர் மூன்று காதல்)
இந்த ஆண்டில் நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ள படங்களின் விவரம்…
1. தலைவா (அனைத்து பாடல்கள்)
2. தங்க மீன்கள் (அனைத்து பாடல்கள்)
3. ராஜா ராணி
4. வணக்கம் சென்னை
5. கேடி ரங்கா கில்லாடி பில்லா
6. உதயம் என்.எச் 4
7. ஆதலால் காதல் செய்வீர்
8. சமர் (அனைத்து பாடல்கள்)
9. பட்டத்து யானை
10. ஐந்து ஐந்து ஐந்து (அனைத்து பாடல்கள்)
11. இவன் வேற மாதிரி
12. ஆல் இன் ஆல் அழகுராஜா (அனைத்து பாடல்கள்)
13. சேட்டை
14. ஒன்பதுல குரு.
15. குட்டிப்புலி
16. தில்லு முல்லு – 2
17. வத்திக்குச்சி
18. சொன்னாப் புரியாது
19. புத்தகம்
20. யாருடா மகேஷ் (அனைத்து பாடல்கள்)
21. மூன்று பேர் மூன்று காதல் (அனைத்து பாடல்கள்)
22. மத்தாப்ப10
23. சுண்டாட்டம்
24. சும்மா நச்சுன்னு இருக்கு
25. நிர்ணயம் (அனைத்து பாடல்கள்)
26. துள்ளி விளையாடு
27. நேரம்
28. அழகன் அழகி
29. கல்லாப் பெட்டி
30. நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்ஏ.(அனைத்து பாடல்கள்)
31. சோக்காலி
32. மாசாணி
33. வெள்ளச்சி (அனைத்து பாடல்கள்)
34. சென்னையில் ஒரு நாள்
தற்போது 100 படங்களுக்கும் மேல் பால்களை எழுதி வருகிறார். அவற்றில் 30 படங்களுக்கும் மேலாக அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார்.
உங்கள் கவிதைப் பயணம் இனிதே தொடர வாழ்த்துகள்…