விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘பாண்டிய நாடு’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பமாகிறது.
இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம்தான் சுசீந்திரன் இயக்குனராகவும், விஷ்ணு நாயகனாகவும் அறிமுகமானார்கள். சூரிக்கும் ‘பரோட்டா’ சூரி என்ற அடையாளத்தை அந்த படம் ஏற்படுத்திக் கொடுத்தது.
அந்த படத்திற்குப் பிறகு இவர்களனைவரும் மீண்டும் இணையும் படம் இது.
இமான் இசையமைக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் சுசீந்திரன். சிசிஎல் – சென்னை ரைனோஸ் அணியில் விஷ்ணு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
தி நெக்ஸ்ட் பிக் பிலிம் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.