‘ஆஹா கல்யாணம்’ படத்தில் ‘பன்ச் பாடல்’…

aaha kalyanamகாதல் படங்கள் மூலம் இந்தியத் திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கித் தந்த யாஷ்ராஜ் பிலிம்ஸ் பட நிறுவனம் முதன் முறையாக தமிழில் நேரடியாகத் தயாரித்துள்ள படம் ‘ஆஹா கல்யாணம்’.

‘நான் ஈ’ பட நாயகன் நானி, வாணி கபூர் மற்றும் பலர் நடிக்க கோகுல் கிருஷ்ணா இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை வெளியீடு வரும் 21ம் தேதி நடக்க உள்ளது.

அதற்கு முன்னதாக ஒரு முன்னோட்டமாக இப்படத்தின் ‘ஒரு பாடல்’ இன்று மாலை வெளியாகிறது.

தரனின் இசையில் உருவாகியுள்ள ‘ஆஹா கல்யாணம்’ பாடல்கள் படத்தின் வெற்றிக்கு முன்னோடியாக இருக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.

இன்று வெளியாக உள்ள ‘ஒரு பாடல்’ , தங்களது அபிமான நடிகர்கள் மேல் உள்ள பேரன்பினால் பிரிந்து கிடக்கும் ரசிகர்கள் எல்லோரும் ரசிக்கத் தக்க வகையில் இருக்கும் ஒரு பாடலாக எழுதப்பட்டுள்ளதாம். மதன் கார்க்கி இப்பாடலை எழுதியிருக்கிறார்.

‘சூப் பாடல்’ போன்று இப்பாடல் ‘பன்ச் பாடல்’ என்று அழைக்கப்பட்டு ஹிட்டாகும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் படக்குழுவினர்.

Read Previous

‘வீர தீர சூரன்’ நாளை ஆரம்பம்…

Read Next

திருமணம் நடக்கவில்லை…நண்பர்கள்தான்… – வனிதா விஜயகுமார்