‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் – இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.
கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் இன்று காலை பூஜையுடன் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது.
விஜய் நடிக்கும் படத்திற்கும், முருகதாஸ் படத்திற்கும் முதன் முறையாக இசையமைக்கிறார் அனிருத்.
சமந்தா விஜய் ஜோடியாக நடிக்க உள்ளார்.
இப்படத்தை லிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘ராஜா ராணி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், லால்குடி இளையராஜா கலை இயக்குனராகவும், அனல் அரசு சண்டைப் பயிற்சி இயக்குனராகவும் பணிபுரிகின்றனர்.
விறுவிறுப்பான ஒரு ஆக்ஷன் படமாகத் தயாராக உள்ளது. விரைவில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.
‘துப்பாக்கி’ வெற்றிக் கூட்டணியின் சாதனை இந்த படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
