யாஷ் ராஜ் பிலிம்ஸ் தமிழில் தயாரித்துள்ள முதல் படம் ‘ஆஹா கல்யாணம்’ விரைவில் வெளிவர இருக்கிறது.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்திய இசை வெளியீடுகளில் ஹிட் வரிசையில் சேர்ந்திருக்கிறது.
தரண் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை தாமரை, மதன் கார்க்கி எழுதியுள்ளனர்.
நானி, வாணி கபூர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதையே ஒரு கலர்ஃபுல்லான பின்னணியில்தான் அமைந்துள்ளது. அதற்கேற்ப பாடல்களும் கொண்டாட்டமாகவே இடம் பெற்றுள்ளன.
இந்த படத்தில் இருக்கும் பாடல்களில் உள்ள தமிழின் நேர்த்தியும் புலமையும் , சொல்லில் அடங்காதவை . இந்த பாடல் வரிகள் காதல் வயப்பட்டவர்களுக்கு ஒரு உயிர் நாதமாக இருக்கும் . HONEY என்று துவங்கும் பாடல் – காதலர்களுக்கு இடையே இருக்கும் ஊடலையும் கூடலையும் மிக அழகாக சித்தரிக்கிறது .
இந்த படத்தின் பாடல்கள் இரட்டை வார்த்தைகளிலே துவங்குவது மிக புதுமையான து . பான் பான் , கத கத , கூட்டாளி கூட்டாளி , தல தல, என வித்தியாச படுகிறது .செம்மொழியில் செழுமையான பாடல் வரிகளுக்கு உகந்த செழிப்பான படப்பிடிப்பும் பாடல்களை மேலும் வலுவாக்குகிறது .இந்த வருடத்தின் மிக சிறந்த படமாக ‘ஆஹா கல்யாணம் ‘ இருக்கும்,” என்கிறார் இசையமைப்பாளர் தரன்.
