ரெட் ஜெயன்ட் வெளியிடும் ‘நெடுஞ்சாலை’

nedunchalai release news“பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, கோ, கண்ணா லட்டு தின்ன ஆசையா, நேரம்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வாங்கி வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் அடுத்ததாக ‘நெடுஞ்சாலை’ படத்தை வெளியிட இருக்கிறது.

இந்த படத்தை பைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன்,ஆஜூ ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

சூர்யா, ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆரி, ஷிவதா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

“நெடுஞ்சாலையில் நடந்த உண்மை நிகழ்வை திரைக்கேற்ற மாதிரி உருவாக்கி இருக்கிறோம்.

பல வருடங்களுக்கு முன் நடந்த நிஜ சம்பவம் இது. 1980ம் வருடத்தை கண் முன் காட்டியிருக்கிறோம்.இதில் காதலை கலந்து கொடுத்திருக்கிறோம்.

பாடல்களும் படமாக்கப் பட்ட விதமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெரும். படத்தை பார்த்த திரு.உதயநிதிஸ்டாலின் உடனே படத்தை வெளியிட வாங்கியது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது,” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா.

இம் மாதம் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது ‘நெடுஞ்சாலை’.

Read Previous

ஆதியும் அந்தமும் – விமர்சனம்

Read Next

இணையங்களில் வெளியான ‘மான் கராத்தே’ ஆடியோ…