‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீடு தற்போதுதான் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்து முடிந்தது.
ஆனால், அதற்கு முன்னதாக நேற்று இரவிலிருந்தே, சில இணைய தளங்களில் திருட்டுத்தனமாக அனைத்துப் பாடல்களும் வெளியாகியுள்ளது.
அதை இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளும்படியும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இப்படி இசை வெளியீடு நடப்பதற்கு முன்னரே இணையதளங்கில் பாடல்கள் வெளியாவது வழக்கமாக நடந்து வருகிறது.
சமீபத்தில்தான் சிம்பு, ஹன்சிகா நடித்த ‘வாலு’ படத்தின் பாடல்கள் இணையதளங்களில் வெளியானது, அதற்கு முன் கார்த்தி, ஹன்சிகா நடித்த ‘பிரியாணி’ பாடல்கள் வெளியானது.
தற்போது சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள ‘மான் கராத்தே’ பாடல்கள் வெளியாகியுள்ளது.
அது என்ன ஹன்சிகா நடிக்கும் படங்களின் இசை வெளியீடு மட்டும் அதிகாரபூர்வமற்ற முறையில் நடக்கிறது ?