செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ படம் தோல்வியைச் சந்தித்தாலும், அடுத்த படத்திற்கான கதையை உருவாக்க ஆரம்பித்து விட்டாராம் செல்வராகவன்.
அநேகமாக, அவர் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்கிறார்கள்.
கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தமிழ்த் திரைப்படங்களில் ஒரு வித்தியாசமான படமாக அமைந்து ‘மேக்கிங்’கிலும் அசத்தலான படமாக பெயரைப் பெற்றது.
அந்த படத்திற்குப் பிறகு ‘மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்’ என காதல் படங்களை இயக்கினார் செல்வராகவன். ஆனால், அவரிடம் பலரும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் என்ன என்றே கேட்டு வருகிறார்களாம்.
இது குறித்து செல்வராவன் கூறியதாவது,
“எனது மனதிலும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் உள்ளது. இப்போது எனக்கு ஒரு ‘பிரேக்’ தேவைப்படுகிறது. கண்டிப்பாக அடுத்த ஆண்டு, அந்த படத்தை இயக்குவேன். சோழர்களின் கர்ஜனையை விரைவில் கேட்பீர்கள்,” என்று கூறியுள்ளார்.