தனுஷ், வெற்றிமாறன் இணையும் ‘சூதாடி’…

director vetrimaran‘பொல்லாதவன், ஆடுகளம்’ என இரண்டு படங்களை தனுஷை வைத்து இயக்கி திறமையான இயக்குனர் என்ற பெயர் பெற்ற வெற்றிமாறன் சுமார் மூன்று வருடங்களாக எந்தப் படமும் இயக்காமல் இருக்கிறார்.

இடைப்பட்ட காலத்தில் ‘உதயம் என்எச் 4’ படத்தைத் தயாரித்து வசனம் எழுதினார். ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்திற்கு வசனம் எழுதினார். கடந்த ஆண்டு அவருடைய தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ என்ற படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். அதர்வா நடிக்கும் ‘ஈட்டி’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

‘ஆடுகளம்’ படத்திற்கு 5 தேசிய விருதுகள் வாங்கினாலும் அடுத்து உடனடியாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தார். இடையில் சிம்பு  நடிக்க ‘வட சென்னை’ என்ற படத்தை இயக்க முடிவெடுத்து அந்தப் படம் ஆரம்பமாகாமலேயே கைவிடப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது தனுஷ், பார்த்திபன் நடிக்க ‘சூதாடி’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்திருக்கிறாராம். இந்தத் தகவலை அவர் தற்போது வெளியிடும் ‘பொறியாளன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். படத்தின் பெயர் அப்புறம் மாறினாலும் மாறலாம் என்றார்.

‘பொறியாளன்’ படத்தை அவரது நண்பரும், உதவியாளருமான தாணு குமார் இயக்குகிறார். ‘உதயம் என்எச் 4’  படத்தின் இயக்குனரான மணிமாறன் வசனம் எழுதுகிறார். தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இயக்குனர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மொத்தத்தில் வெற்றிமாறன் நண்பர்களின் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. “சிந்து சமவெளி, அரிது அரிது’ படங்களில் நாயகனாக நடித்த ஹரீஷ் கல்யான் நாயகனாக நடிக்கிறார். ஆனந்தி இந்தப் படம் மூலமாக நாயகியாக அறிமுகமாகிறார். இவர் தற்போது பிரபு சாலமன் இயக்கும் ‘கயல்’ படத்திலும், சற்குணம் இயக்கும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

‘எனது நீண்ட நாளைய நண்பர் தாணு குமாருக்கு உதவி செய்யும் வகையில் இந்த ‘பொறியாளன்’ படத்தை நான் வழங்குகிறேன். இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்,” என்கிறார்.

Read Previous

சம்பளத்தைக் குறைத்தாரா சிவகார்த்திகேயன்…??

Read Next

‘அஞ்சான்’ வசூல் இலக்கு…150 கோடி…

Most Popular