யு டிவி மோஷன் பிக்சர்ஸ், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடித்துள்ள ‘அஞ்சான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியாக உள்ளது.
இப்படம் சென்னையில் மட்டும் 40 தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னைப் புறநகரில் 21 தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னையில் ஒரே வளாகத்தில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகிறது. சத்யம் காம்ப்ளக்சில் இரண்டு தியேட்டர்களிலும், எஸ்கேப் வளாகத்தில் மூன்று , ஐநாக்ஸில் மூன்று , உட்லண்ட்ஸ்-ல் இரண்டு , ஆல்பட்-ல் இரண்டு , அபிராமி வளாகத்தில் நான்கு , சங்கம் வளாகத்தில் இரண்டு , பிவிஆர் வளாகத்தில் மூன்று, பெரம்பூர் எஸ் 2 வளாகத்தில் மூன்று, கமலா வளாகத்தில் 2, உதயம் காம்பள்க்ஸில் மூன்று, ஐநாக்ஸ் நேஷனல் வளாகத்தில் நான்கு என மொத்தம் 40 தியேட்டர்களில் வெளியாகிறது.
சென்னையைப் பொறுத்தவரை அபிராமி மெகா மால் இப்படத்தை வெளியிடுகிறது. ‘அஞ்சான்’ வெளியீட்டைப் பற்றி அபிராமி மெகா மால் – அபிராமி ராமநாதன் கூறுகையில், “எங்களது நிறுவனம் ‘சிவாஜி’ திரைப்படத்தை சென்னையில் உள்ள 18 தியேட்டர்களில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பலரும் அம்மாதிரியே படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அவரவர் வீட்டுக்கு அருகில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் படத்தை வெளியிட முடிவு செய்து இந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ‘அஞ்சான்’ படத்தை ரிலீஸ் செய்கிறோம், ” என்கிறார்.
இதன் மூலம் ‘அஞ்சான்’ படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே நல்ல வசூலை அள்ளிவிட முடியும் என திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.