‘நரகாசூரன்’ கதை யாருக்கும் தெரியாது ?

‘துருவங்கள் 16’ படம் மூலம் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமாகி பெரிய கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன்.

அவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள ‘நரகாசூரன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதியன்று வெளியாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி, இயக்குனர் கார்த்திக் நரேன், இசையமைப்பாளர் ரோன் எதன் யோகன், நடிகர்கள் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஆத்மிகா, கிட்டி, வெங்கட் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் இயக்குனர் கார்த்திக் நரேனின் திட்டமிடல், ஈடுபாடு, மரியாதை ஆகியவற்றைப் பாராட்டிப் பேசினர்.

24 வயதில் இரண்டாவது படத்தை இயக்கி முடித்துள்ளார் கார்த்திக் நரேன்.

படத்தின் கதையை படத்தில் நடித்துள்ள யாருக்குமே கார்த்திக் நரேன் சொல்லவில்லையாம். அவரவர் கதாபாத்திரங்கள், பகுதிகள் பற்றி மட்டும்தான் தெரியுமாம். அதனால், இந்தப் படத்தின் சஸ்பென்ஸ் இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது என்றார்கள்.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் திரையிட்டுக் காட்டப்பட்டது. ‘நரகாசூரன்’ என்ற ஒரு பெயரை மையமாக வைத்து படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு புதிய அனுபவம் ஆகஸ்ட் 31ம் தேதியன்று நமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு டிரைலரைப் பார்த்ததும் வந்தது.

இன்று மாலை இப்படத்தின் டிரைலர் யு டியுபில் வெளியாக உள்ளது.

Read Previous

‘பிக் பாஸ்’ அநாகரிகம், விலகுவாரா கமல்ஹாசன் ?

Read Next

அண்ணனுக்கு ஜே – அரசியல் அதிரடி…

Most Popular