‘கத்தி’ – சென்னையில் 30 திரையரங்குகளில் ரிலீஸ்…

kaththi chennai theaters newsதமிழ்த் திரைப்படங்கள் தற்போது ஒரே சமயத்தில் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதிலும் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

முன்பெல்லாம் சென்னையில் ஒரு திரைப்படம் அதிக பட்சமாக ஐந்து திரையரங்குளில் மட்டுமே வெளியாகும். ‘சிவாஜி’  படத்திலிருந்து அந்த நிலை மாறிவிட்டது. ஐந்து திரையரங்குகளில் வெளியாகி ஒரு படம் 100 நாட்கள் அல்லது அதற்கு மேல் ஓடுவது மாறிவிட்டது.

30 அல்லது 40 திரையரங்குகளில் வெளியாகி, ஒரு சில நாட்களுக்குள்ளேயே லாபகரமான வசூலை அள்ளுவதுதான் தற்போதைய டிரெண்டாக மாறிவிட்டது.

அந்த விதத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள ‘கத்தி’ திரைப்படம் படம் வெளியாகும் ஒரு சில நாட்களுக்குள்ளேயே மொத்த வசூலை அள்ளிவிடும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் எதிர்பார்க்கிறார்களாம்.

இதற்கு முன் விஜய் – முருகதாஸ் கூட்டணியின் ‘துப்பாக்கி’ அனைவருக்கும் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் படத்தில் மீண்டும் ஒரு மாயாஜாலத்தை அந்தக் கூட்டணி ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் எழுந்துள்ளது.

சென்னையில் மட்டும் ‘கத்தி’ திரைப்படம் 30 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளும் அடங்கியுள்ளன. அவற்றில் உள்ள திரையரங்குகளையும் சேர்த்தால் சுமார் 50 திரையரங்குகள் வரை படம் திரையிடப்பட வாய்ப்புள்ளது.

தமிழ் நாட்டில் சுமார் 500 திரையரங்குகள், கேரளாவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகள், உலகம் முழுவதும் மொத்தமாக 1500 திரையரங்குகள் வரை ‘கத்தி’ திரையிடப்பட உள்ளதாம்.

இதற்கு முந்தைய விஜய் படங்களின் சாதனையை ‘கத்தி’ முறிடியத்து விடும் என்றுதான் கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

ஒரே இரவில் ‘கத்தி’யின் சாதனை…

Read Next

30 வயதில் திருமணம்…சமந்தா திடீர் முடிவு…