தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக ஒரு படத்தின் இயக்குனரே அவரது படத்தின் முதல் நாள் வசூல் தொகையை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
தீபாவளியன்று திரைக்கு வந்த ‘கத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலாக 23 கோடியே 80 லட்ச ரூபாயை வசூல் செய்துள்ளது என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, வட இந்தியா ஆகிய இடங்களில் 16 கோடியே 45 லட்சம் ரூபாயையும், வெளிநாடுகளில் 7 கோடியே 35 லட்ச ரூபாயையும் ‘கத்தி’ திரைப்படம் முதல் நாள் வசூலாக அள்ளியிருக்கிறது.
இது தென்னிந்திய மொழிப் படங்களில் இதுவரை வெளிவந்த அனைத்துப் படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தின் வசூலையும் ‘கத்தி’ முந்தியிருக்கிறது என்பதே அர்த்தம். அது மட்டுமல்ல உலக அளவில் அதிக அளவில் வெளியாகம் தெலுங்குத் திரைப்படங்களின் வசூலையும் ‘கத்தி’ படம் மிஞ்சியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
‘கத்தி’ படத்தின் இந்த சாதனை வசூல் மூலம் தமிழ்த் திரைப்படங்களின் வியாபாரா எல்லை இன்னும் விரிவடைந்துள்ளதாக தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இயக்குனர் முருகதாஸுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.