‘கத்தி’ வெற்றி – அனிருத் திடீர் முடிவு…

anirudh at I audio launch‘கத்தி’ படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் திடீர் முடிவு ஒன்றை எடுத்து விட்டாராம். இனி, சிறிய படங்கள், சிறிய இயக்குனர்கள் படங்களுக்கு இசையமைக்கப் போவதில்லை எனப் பேசி வருகிறாராம்.

அதை செயலிலும் கூட காட்டி விட்டார் என்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கி அகமது அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.

ஆனால், தற்போது திடீரென அகமது இயக்கும் படத்தில் தன்னால் பணிபுரிய முடியாது என்று சொல்லிவிட்டாராம். விரைவில் பாடல் பதிவு வைத்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருந்த படக் குழுவினருக்கு அனிருத்தின் இந்த முடிவு அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இது பற்றிய செய்திகள் ஏற்கெனவே வெளிவந்த நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அனிருத் இனி பெரிய இயக்குனர்களுடனும், முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கப் போகிறாராராம்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இதுவரை அவர் மொத்தம் 7 படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். அதில் இரண்டு படம் தனுஷ் நடித்தவை, இரண்டு படம் சிவகார்த்திகேயன் நடித்தவை.

தற்போது ‘காக்கிச் சட்டை, ஆகோ, நானும் ரௌடிதான்’ ஆகிய படங்களுக்கு இசையைமத்து வருகிறார். இவற்றில் இரண்டு படங்கள் தனுஷ் தயாரிப்பவை.

ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் சிறிய படங்களுக்கு இசையமைப்பதில் ஆர்வம் காட்டுவதேயில்லை. இப்போது அனிருத்தும் அவர்கள் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.

Read Previous

‘என்னை அறிந்தால்’ – டிவிட்டரில் ‘டிரென்டிங்’ சாதனை…

Read Next

‘என்னை அறிந்தால்’ – அசத்தலான முதல் பார்வை…