‘என்னை அறிந்தால்’ – டிவிட்டரில் ‘டிரென்டிங்’ சாதனை…

thala 55 title newsஇன்று 30ம் தேதியில் கடிகார முள் 12:00 என்று மாறியவுடனேயே அஜித் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’ என அறிவிக்கப்பட்டது.

நள்ளிரவு நேரத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் தலைப்பை என்னவென்று தெரிந்து கொள்ள இத்தனை பேர் காத்திருப்பார்களா என்பது நம்மை ஆச்சரியப்படுத்திவிட்டது.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ‘டிவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தின் தலைப்பு சென்னை டிரென்டிங்கில் வந்து விட்டது. அடுத்த அரை மணி நேரங்களுக்குள் இந்திய அளவில் டிரெண்டிங்கில் வந்துவிட்டது. டிவிட்டரை ஓபன் செய்து உட்கார்ந்து கொண்டிருந்தால் அஜித் ரசிகர்கள் படத் தலைப்பை பற்றி அடிக்கும் கமெண்ட்டுகள் நொடிக்கு ஆயிரமாக வந்து விழுந்து கொண்டேயிருந்தது.

அதன் பின் ‘என்னை அறிந்தால்’ தலைப்பு உலக அளவிலும் டிரெண்டிங்கில் போய்விட்டது. ஒரு தமிழ்ப் படத்தின் பெயர் உலக அளவில் அரை மணி நேரத்திற்குள் டிரென்டிங்கில் சேர்ந்தது இதுவே முதல் முறை.

இப்போது வரை இந்திய டிரென்டிங்கில் கடந்த சில மணி நேரங்களாகவே “என்னை அறிந்தால்’, முதலிடத்திலும் ‘தல 55’ நான்காவது இடத்திலும் இருந்து வருகிறது.

சென்னை டிரென்டிங்கில் ‘என்னை அறிந்தால், தல, அஜித், கௌதம் மேனன்,’ ஆகியவை அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன.

சமூக வலைத்தளங்களும், இணைய தளங்களும் திரைப்படங்களின் செய்திகளைப் பரப்புவதில் தற்போது முன்னிலை வகிக்கின்றன என்பதற்கு இவை ஒரு சிறந்த உதாரணமாகும்.

 

Read Previous

அஜித் பட டைட்டில் ‘என்னை அறிந்தால்…’

Read Next

‘கத்தி’ வெற்றி – அனிருத் திடீர் முடிவு…