இன்று முழுவதும் ‘என்னை அறிந்தால்’ பற்றிய பேச்சாகவே இருக்கும். அஜித்தின் புதிய பட டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அனைத்து சினிமா இணையதளங்களிலும் அவர்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.
சமூக வலைத் தளங்களிலும் அது பற்றிய விவாதமே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சற்று முன்னர் ‘என்னை அறிந்தால்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ரோஷத்துடன் ஒரு மோட்டர் பைக்கில் மீது அஜித் அமர்ந்திருக்கும் அந்தப் போஸ்டரின் மூலம் அஜித் ஒரு காவல் துறை அதிகாரியாகவும் படத்தில் நடிக்கிறார் எனப் புரிகிறது.
கடந்த சில படங்களாக அஜித்தை சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே பார்த்தவர்களுக்கு இந்த புதிய அஜித் மிரட்டலாகவே இருக்கிறார்.