இயக்குனர் சாமி படம் என்றால் ‘ஏ’ ரகமாகத்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரை கடந்த காலங்களில் அவரை விடாமல் துரத்தி வருகிறது.
இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்த சாமி ’நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்று இப்போது பாச உணர்வை தூக்கிப்பிடித்து ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படம்தான் ‘கங்காரு’
இப் படத்தில் நாயகனாக அர்ஜுனா நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஜின்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
”இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு என்று” இயக்குனர் சாமியின் முந்தைய படங்கள் பற்றி அவரது அம்மாவே திட்டியிருக்கிறார். .
சாமியும் ‘கங்காரு’ படம் என் அம்மாவே பாராட்டும்படி இருக்கும்.. இது வரையிலான சாமியின் பிம்பத்தை இப்படம் நிச்சயம் உடைக்கும், என்று முந்தைய பேட்டிகளில் கூறி வந்தார்.
அதனை உறுதி செய்யும் விதமாக படம் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ‘கங்காரு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அழுத்தமான கதையில் பல இடங்களில் கண்ணீரையும் வரவைக்கிறார் என்று பாராட்டியும் உள்ளனர்.