இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளரான அனிருத், பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்திற்காக தமன் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
நா.முத்துக்குமார் எழுதிய, “யாரிவள் யாரிவள் என்னாச்சி…என்னமோ ஏதோ ஆயாச்சி…” எனத் தொடங்கம் பாடலை சமீபத்தில் பாடினார் அனிருத்.
அனிருத், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஐ’ படத்தில் பாடியதற்குப் பிறகு வேறொரு இசையமைப்பாளரின் இசையில் பாடும் பாடல் இது.
தமன் இசையில் இந்தப் படத்திற்காக ஐந்து இனிமையான பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியாவின் முன்னணி பாடகர்களான ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன், மோஹித் சௌஹான், அர்சித் சிங் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அவர்களோடு நடிகைகள் ஆன்ட்ரியா, லட்சுமி மேனன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்.
இப்படத்திற்காக நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, யுகபாரதி, கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
பிரசாந்த், நாசர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், துளசி மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்க, நர்கீஸ் ஃபக்ரி ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க அருண் ராஜ வர்மா இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.