தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் லட்சுமி மேனன் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் இடம் பெற்ற பத்திரிகையாளரான ஏக்நாத் எழுதிய ‘குக்குரு..குக்குரு…’ என்ற ஹிட்டான பாடலை இமான் இசையில் பாடினார்.
அதற்குப் பிறகு தற்போது மீண்டும் ‘சாஹசம்’ படத்திற்காக தமன் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
இப்பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. லட்சுமி மேனன் குரலில் இந்தப் பாடலும் இனிமையாக வந்துள்ளதாக இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் தியாகராஜன், படத்தின் நாயகன் பிரசாந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஹீரோயின் வாய்ப்பு குறைந்தாலும் லட்சுமி மேனன் பாடகியாக திரையுலகில் நீடித்து நிற்கலாம்…