வசுந்தராவின் புகைப்படங்கள் ‘ஃபோட்டோஷாப்’ செய்யப்பட்டவை…

vasundhara news“வட்டாரம், பேராண்மை, போராளி, தென்மேற்குப் பருவக்காற்று, சொன்னா புரியாது,” உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வசுந்தராவின் ஆபாசப் புகைப்படங்கள் என்று சொல்லப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்தப் புகைப்படங்கள் வெளியானதும் வசுந்தரா அவர் பயன்படுத்தி வந்த சமூக வலைத்தளங்களின் கணக்குகளையும் மூடி விட்டார். அவருடைய தொலைபேசியையும் அணைத்து வைத்துவிட்டார். அதனால், அது பற்றிய விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் பத்திரிகையாளர்கள் தவித்துப் போயினர்.

இதனிடையே அந்த புகைப்படம் பற்றி வசுந்தரா அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளன. அந்தப் புகைப்படத்தில் இருப்பது அவரில்லை என்றும், அது ஃபோட்டோஷாப் மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்றும் சொல்லியிருக்கிறார். அம்மாதிரியான புகைப்படங்களை வெளியிடுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக சண்டைகளும், சச்சரவுகளும், இது போன்ற தவறான செயல்களும் அதிகம் இடம் பெற்று இளைஞர்களை பாதிக்க வைக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Read Previous

பொங்கலுக்கு நாயகனாக வருகிறார் ஜி.வி.பிரகாஷ்…

Read Next

திரிஷாவுக்கு திருமணம் உறுதி…