2015 – ல் முன்னணியில் நயன்தாரா…

nayanthara news for 2015‘ஐயா’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

கடந்த ஆண்டில் இவர் நடித்து ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம் மட்டுமே வெளிவந்தது. ஆனால், தற்போது தமிழில் மட்டும் ஆறு படங்களில் நடித்து வருகிறார்.

சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஆரியுடன் ‘மாயா’, சூர்யாவுடன் ‘மாஸ்’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’, ஜெயம் ரவியுடன் ‘தனியொருவன்’, விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரௌடிதான்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே இத்தனைப் படங்களில் நடித்து வரும் நயன்தாராவிற்கு இந்தப் படங்கள் அனைத்துமே அடுத்த ஐந்தாறு மாதங்களில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து விடும். அதற்குள் வேறு சில படங்களில் நடிக்க ஒப்பபந்தமானால் அந்தப் படங்களும் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவர வாய்ப்புள்ளது.

தற்போது 30 வயதைத் தொட்டிருக்கும் நயன்தாராவிற்கு கிளாமரான வேடங்களும், குடும்பப் பாங்கான வேடங்களும் பொருத்தமாக அமைவதே அவருடைய வெற்றிக்கு ஒரு காரணம்.

மற்ற இளம் நடிகைகளைக் காட்டிலும் நயன்தாரா வசம் ஆறு படங்கள் இருப்பது ஆச்சரியம்தான்.

Read Previous

திரிஷாவுக்கு திருமணம் உறுதி…

Read Next

இந்த பொங்கல்…விஜய் டிவி பொங்கல்…