‘ஐ’ படத்திற்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கிய பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் சற்று முன்னர் ஒரு பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
“இந்த பத்திரிகைக் குறிப்பு வாயிலாக ஆஸ்கர் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் திரு.ரவிசந்திரன் தயாரிக்கும் ‘ஐ’ திரைப்படத்துக்கு எங்களது முழு ஒத்துழைப்பைத் தருகிறோம். ஜனவரி14ஆம் தேதி பொங்கலன்று வெளிவரும் ‘ஐ’ படம் விஷயமாக எங்களுக்குள் இருந்த தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக பேசித் தீர்க்கப்பட்டு விட்டது.
திரைப்படத் துறையின் நலனை முன்னிட்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே ‘ஐ’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளி வர தடை ஏதும் இல்லை என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம். இந்த படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.