தித்திக்கும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு, வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது வேந்தர் தொலைக்காட்சி.
ஜனவரி 15, 2015 – வியாழன்
காலை 7.30 மணி – புத்தம்புது காலை
நடிகை ஓவியா, தன்னுடைய பொங்கல் அனுபவங்களைப் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி. மேலும், தன்னுடைய திரை அனுபவங்கள் பற்றியும் ஓவியா பகிர்ந்து கொள்கிறார்.
காலை 9 மணி – பட்டிமன்றம்
நாஞ்சில் சம்பத் தலைமையில் முன்னணிப் பேச்சாளர்கள் பங்குபெற்ற, ‘மாற வேண்டியதும் மாற்ற வேண்டியதும் எது? பழமையா? புதுமையா?’ சிறப்பு பட்டிமன்றம்.
பகல் 12 மணி – ‘ஐ’ சிறப்பு பார்வை
பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்திருக்கும் ‘ஐ’ படத்தின் நாயகன் விக்ரமின் நேர்காணல்.
பகல் 12.30 மணி – ஜில் ஜங் ஜக்
சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் கலகலப்பான கலாட்டா நிகழ்ச்சி.
பிற்பகல் 2 மணி – புலிப்பார்வை – திரைப்படம்
வேந்தர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான ‘புலிப்பார்வை’ திரைப்படம்.
மாலை 6 மணி – நாட்டுப்புறப் பொங்கல்
பின்னணிப் பாடகர் வேல்முருகன், நாட்டுப்புறக் கலைஞர்களோடு ஆடிப்பாடி கொண்டாடும் நிகழ்ச்சி.
இரவு 8 மணி – வேந்தர் வீட்டு பொங்கல்
சினிமா பிரபலங்கள், தங்கள் மனைவிகளோடு பங்குபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி.
ஜனவரி 16, 2015 – வெள்ளி
காலை 7.30 மணி – புத்தம்புது காலை
நடிகர் விமல், தன்னுடைய பொங்கல் மற்றும் திரை அனுபவங்கள் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி.
காலை 10 மணி – பி பார் ப்ரோ
பிரபல நட்சத்திரங்கள், கடற்கரையில் பொங்கல் கொண்டாடும் கலாட்டா நிகழ்ச்சி.
பிற்பகல் 2 மணி – பவர் பொங்கல்
கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பவர் ஸ்டார் சீனிவாசன் கொண்டாடும் காமெடி கதகளி.
பிற்பகல் 2.30 மணி – ஸ்டார் ஹாலிடே
நடிகர் விதார்த், கிராமத்து மக்களோடு இணைந்து ஆடல், பாடல், விளையாட்டு என அசத்தும் நிகழ்ச்சி.
மாலை 6.30 மணி – 7ஆம் உயிர் : ஒரு முன்னோட்டம்
வேந்தர் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் திகில் நெடுந்தொடர் 7ஆம் உயிர் நட்சத்திரங்களோடு, படப்பிடிப்புத் தளத்தில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டம்.
இரவு 8 மணி – இது நம்ம ஊர் திருவிழா
பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகியவற்றை மண்ணின் மைந்தர்கள் வழங்கும் நிகழ்ச்சி.
நம் மண்ணின் திருவிழாவை, வேந்தர் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுங்கள்.
