பாபி சிம்ஹா உருமும் ‘உறுமீன்’…முதல் பார்வை வெளியீடு…

urumeenஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் படம் ‘உறுமீன்’.

சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் அச்சு இசையமைப்பில் நாயகனாக ‘ஜிகர்தண்டா’ பாபி சிம்ஹா, வில்லனாக ‘மெட்ராஸ்’ கலையரசன், நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கின்றனர்.

முக்கிய வேடங்களில் அப்புக்குட்டி, காளி வெங்கட், மனோபாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இரண்டு வித்தியாசமான கதைக்களங்களில் பயணிக்கும் திரைக்கதை இன்றைய பொருளாதாரப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கேரளாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. இதற்கு முன் அந்த இடங்களில் யாரும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்ததில்லையாம்.

இப்படத்தின் முதல் பார்வையை இன்று மாலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவருடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டார்.

Read Previous

பழம் பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்…

Read Next

‘ஷமிதாப்’ யார்…? தனுஷா…அமிதாப்பா…?

Most Popular