‘என்னை அறிந்தால்’ கதை என்ன…கௌதம் மேனன் விளக்கம்…

yennai arindhaal gowtham menonபிப்ரவரி 5ம் தேதி, ஒரு மிகப் பெரிய கொண்டாட்டத்திற்குத் தமிழ்த் திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது. பொங்கலுக்கே வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் அன்றுதான் வெளியாக உள்ளது.

வித்தியாமாசன படங்களைக் கொடுத்து ஸ்டைலிஷனா இயக்குனர் என்று புகழப்பட்ட இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக நடித்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’.

ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ஐஸ்வர்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது,

“அஜித் சாரோட இணைந்து படம் பண்றது எனக்குக் கிடைச்ச பெருமை. நிறைய பேர் பார்க்காத அஜித்தை இந்தப் படத்தை காட்டியிருக்கேன்.

குடும்பத்தோட இந்தப் படத்தைப் பார்க்கலாம். அஜித் சார்தான் ஹீரோன்னு முடிவான பிறகு அவரைச் சந்திச்சி கதையைச் சொன்னேன். சார், உங்களோட ஃபேன்ஸ்க்கு ஏத்த படி சில காட்சிகள் எல்லாம் வைக்கலாம்னு இருக்கேன் எனச் சொன்னேன். ஆனால், அவர் எனக்கு எது சரின்னு படுதோட, அதை வையுங்க, உங்க ஸ்டைல்லயே படத்தைப் பண்ணுங்கன்னு சொன்னார்.

இதுவரைக்கும் 14 படங்கள் இயக்கியிருக்கேன். நான் இயக்கிய படங்கள்லயே இந்தப் படத்தை என்னோட பெஸ்ட் படம்னு சொல்வேன். பெண்களுக்கு இந்தப் படம் ரொம்பவும் பிடிக்கும். இது ஒரு எமோஷனலான ஆக்ஷன் த்ரில்லர். படத்துல வயலன்டான காட்சிகள் இல்லாமத்தான் எடுத்திருக்கோம்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் ட்ரீட்மென்ட்தான் முக்கியம். அஜித் சார் இதுல 25 வயசுல இருந்து 40 வயசு வரைக்கும் வர்ற தோற்றங்கள்ல நடிச்சிருக்காரு. இதுக்காக ஸ்பெஷல் மேக்கப்லாம் எதுவும் போடலை. யதார்த்தமா ஒருத்தர் எப்படி அந்தந்த காலகட்டங்கள்ல இருப்பாரோ, அப்படித்தான் அவர் தன்னை மாத்திக்கிட்டாரு.

இந்தப் படத்துக்காக தொடர்ந்து 32 மணி நேரம் டப்பிங் பேசியிருக்காரு. அவரை இந்தப் படத்துல ரொம்பவும் இன்வால்வ் பண்ணி நடிச்சாரு.

படத்தோட கதை என்னன்னு டீடெய்லா சொல்ல முடியாது. வேணும்னா இப்படிச் சொல்லலாம். ஒரு பையனை அவங்க அம்மா டாக்டரா ஆகணும்னு சொல்றாங்கன்னு வச்சிக்குங்க. அவன் என்னவா ஆகறான்கறதுதான் படத்தோட கதை. அதுல இன்னைக்கு நடக்கிற சில விஷயங்கள், க்ரைம், கேங்ஸ்டர், போலீஸ், டான்சராக இருக்கிற ஒரு பொன்னு, சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கிற ஒரு பொன்னு, ஒரு வில்லன், இவங்களைச் சுத்தி நடக்கிற விஷயங்கள்தான் படத்தோட கதை.

படம் நல்லா ஓடும்கற நம்பிக்கை எனக்கு இருக்கு, அப்படி ஓடுச்சின்னா இந்தப் படத்தோட இரண்டாம் பாகத்தை பண்ணணும்னு எனக்கு ஆசையா இருக்கு.

Read Previous

‘ஷமிதாப்’ யார்…? தனுஷா…அமிதாப்பா…?

Read Next

மிரட்ட வரும் ‘மான் வேட்டை’…