50வது நாளில் ‘லிங்கா’…

lingaa 50th day“முத்து, படையப்பா” படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படமான ‘லிங்கா’ திரைப்படம் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியானது.

ஆரம்பம் முதலே படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து வினியோகஸ்தர்களால் எழுந்த பிரச்சனையாலும் வழக்கமான ரஜினி படம் ஏற்படுத்தும் சாதனையை ‘லிங்கா’ படத்தால் நிகழ்த்த முடியவில்லை.

ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, ஏ.ஆர்.ரகுமான் என இந்திய அளவில் பெரிய கூட்டணியாக அமைந்த இந்தப் படம் ரஜினியின் மற்றுமொரு படமாக மட்டுமே அமைந்தது.

இருந்தாலும் சென்னையில் மூன்று திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் வேறு சில திரையரங்குகளிலும் இன்று 50வது நாளைத் தொட்டிருக்கிறது ‘லிங்கா’.

Read Previous

Rajitha Kalpradha – Title winner of Nalaya Iyakunar season 5

Read Next

‘C2H’ தள்ளி வைப்பு ஏன் ? – சேரன் விளக்கம்

Most Popular