‘லிங்கா’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்ன என்பது சஸ்பென்சாகவே உள்ளது. அவர் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன் 2’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக ஏற்கெனவே பல செய்திகள் வெளிவந்தன.
தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கப் போகும் ஒரு புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் பரவி வருகின்றன.
மகேஷ்பாபு, வெங்டேஷ், சமந்தா, அஞ்சலி நடித்து தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி சேட்டு’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் அடலா தான் இந்தப் புதிய படத்தை இயக்க உள்ளார். ‘பிரம்மமோற்சவம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
ரஜினிகாந்த் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப் போகிறேன் என்பதை அவரே அறிவித்தால்தான் உண்டு. ‘லிங்கா’ பிரச்சனையை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வந்த பிறகுதான் அவர் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள்.