‘உள்ளாடை’ விளம்பரம்…சமந்தா மறுப்பு…

samantha news‘கத்தி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்ட சென்னைப் பெண்ணான சமந்தா, ஒரு உள்ளாடை விளம்பரத்தில் நடிக்கப் போவதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

ஆனால், அப்படிப்பட்ட விளம்பரம் எதிலும் நடிக்கவில்லை என சமந்தா அந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, சமந்தா, சித்தார்த் இருவரது காதலைப் பற்றியும், அவர்களின் பிரிவைப் பற்றியும் பரவலான செய்திகள் கிசுகிசுக்களும், செய்திகளும் வெளிவந்தன.

தற்போது, சமந்தாவைப் பற்றிய மேலும் ஒரு செய்தியாக வெளிவந்த இந்தச் செய்திக்கு சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழில் இந்த ஆண்டு அதிகப் படங்களில் சமந்தா நடிக்கப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.

Read Previous

ரஜினிகாந்த் – மகேஷ்பாபு இணைகிறார்களா…?

Read Next

உதயநிதியைக் கவர்ந்த ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’…