நிரஞ்சனா புரெடக்சன்ஸ் என்ற நிறுவனம் ‘தப்பா யோசிக்காதீங்க’ எனும் புதிய திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும், காலை 7.00 மணிக்கு மாலை 6.00 மணிக்குள் 11 மணி நேரத்திற்குள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள முதல் இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.
இன்றைய வாழ்க்கை சூழலில் ஒரு மனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால், அந்த குடும்பத்தினால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் என்ன ?. அந்த மனிதன் பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தப்படும் போது அவனுக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி கையாள்கிறான் என்பதை மிக தெளிவாக இத்திரைப்படம் விளக்கும்.
நாயகனாக புதுமுகம் ராஜா, கதாநாயகியாக ஜோதிஷா, சனிலா, மற்றும் சிசர் மனோகர், மகி, பேபி நட்சத்திரம் மோனிகா மற்றும் பலர் 46 முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் ஸ்டீபன் சதீஷ் இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் ஒரு வீட்டில் படமாக்கப்பட்டு 11 மணி நேரத்தில் முடிக்கப்பட்டது.