‘வாலு’ மே 9ல் வருகிறது…

விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையைமப்பில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘வாலு’. கடந்த மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் தடைபட்டு தடைபட்டு ஒரு வழியாக முடிவடைந்தது.

படத்தின் வெளியீடும் நவம்பர், மார்ச் என்று அறிவிக்கப்பட்டு தள்ளிக் கொண்டே வந்தது. தற்போது மே 9ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார்கள்.

மே 1ம் தேதி “உத்தம வில்லன், புறம்போக்கு, வை ராஜா வை” போன்ற படங்கள் வெளிவருவதால் இந்தப் படத்தை ஒரு வாரம் கழித்து தனியாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

சிம்பு நடித்து ஒரு படம் வெளிவந்து மூன்று வருடங்களாகி விட்டதால் இந்தப் படத்தின் வெளியீட்டை அவரே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

Read Previous

‘ஓ காதல் கண்மணி’ – ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸ்…

Read Next

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – விமர்சனம்

Most Popular