‘ஓ காதல் கண்மணி’ – ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸ்…

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், கனிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓ காதல் கண்மணி’.

சுமார் 2 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் இப்படம் வெளிவர உள்ளதால் நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் இப்போதே ஹிட்டாகி வருகின்றன.

இப்போது இந்தப் படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் இப்படத்தை வினியோகம் செய்கிறது.

Read Previous

36 Vayadhinile – Official Theatrical Trailer

Read Next

‘வாலு’ மே 9ல் வருகிறது…