சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் நேரடியாகச் சென்று சேர முடிகிறது என ஏறக்குறைய அனைத்து திரைப் பிரபலங்களும் அதில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பல சமயங்களில் பாராட்டுக்கள் கிடைத்தாலும், சில சமயங்களில் எதிர்மறை கருத்துக்களும் பரிசாகக் கிடைக்கின்றன. அதோடு இருந்தால் பரவாயில்லை, சில எதிர்மறை கருத்துக்கள் எல்லை மீறியும் வரும்.
இன்னமும் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவராக இருக்கும் அருண் விஜய், அவருடைய டிவிட்டரில் விடியற்காலையில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் அவர் சிவகார்த்திகேயனைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் அருண் விஜய்யை கமெண்ட்டுகளால் கதற விட்டனர்.
பின்னர் காலையில், தன்னுடைய டிவிட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டுவிட்டதாகவும் அதை சரி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்து, முதலில் போட்ட பதிவையும் நீக்கி விட்டிருந்தார். ஹேக் செய்யப்பட்டதாகச் சொன்ன அந்ததப் பதிவுக்கும் ரசிகர்கள் கடுமையான தாக்குதல்களைக் கொடுத்தனர். அதனால், பின்னர் அந்தப் பதிவையும் நீக்கிவிட்டார்.
சற்று முன்தான் அவருடைய டிவிட்டரில் இதற்காக மீண்டும் ஒரு பெரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
“டிவிட்டர் கணக்கு பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது, இந்த நிலைமையை நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி. நான் பல வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். கடின உழைப்புக்கும், பொறுமைக்கும் உள்ள மதிப்பு எனக்குத் தெரியும். திறமைசாலிகளை நான் என்றுமே மதிப்பேன், மதித்தும் வருகிறேன். என்னுயை சக நடிகர்களைப் பற்றி நான் என்றும் தரக் குறைவாக நினைத்தது கிடையாது. நடிகர்கள் சகோதரப் பாசத்துடன் பழகும் ஆரோக்கியம்ன விஷயத்தைப் பிரித்துவிடாதீர்கள்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
https://twitter.com/arunvijayno1/status/1036244175849746433
https://twitter.com/arunvijayno1/status/1036244308318466049
அருண் விஜய் விடியற்காலையில் பதிவிட்டது சிவகார்த்திகேயனைப் பற்றித்தான் என்று அவருடைய ரசிகர்கள், நடுநிலை ரசிகர்கள் பலரும் அருண் விஜய்க்கு அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இதற்காக சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பல மீம்ஸ்களும் காலை முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
அருண் விஜய்யின் டிவிட்டர் கணக்கு ஒரு உறுதி செய்யப்பட்ட கணக்க. அதை அவ்வளவு சீக்கிரம் யாரும் ‘ஹேக்’ செய்ய முடியாது.
எப்படியோ அருண் விஜய், உண்மையிலேயே அந்த டிவிட்டரை பதிவிட்டாரோ இல்லையோ, இதன் மூலம் சிவகார்த்திகேயன் பற்றிய ரசிகர்களின் ஆதரவு பலம் இன்னும் அதிகரித்துவிட்டது என்பதே உண்மை.