பேய் வேடத்தில் ராய் லட்சுமி…

மாபெரும் வெற்றி பெற்ற ‘மைனா’, மற்றும் “சாட்டை, மொசக்குட்டி” ஆகிய படங்களைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ் தயாரித்து வரும் ‘சவுகார் பேட்டை’.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார். மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தை இயக்கிய வடிவுடையான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“இந்த படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரம் மந்திரவாதி. நாயகியாக நடிக்கும் ராய் லஷ்மி பல பங்களில் நடித்திருக்கிறார். ஆனால், முதன் முறையாக ‘மாயா’ என்ற பேய் வேடத்தில் நடிக்கிறார். பேய் பிடித்து, தானும் ஆடி, மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் திகிலான கதாப்பாத்திரம் அவருக்கு,” என்கிறார் இயக்குனர்.

அழகான நடிகைகள் பேயாக நடிப்பது தற்போது தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆகிவிட்டது. அந்த வரிசையில் இப்போது மற்றுமொரு அழகான பேயாக ராய் லட்சுமி நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Read Previous

ஜெயா டிவி – ஏப்ரல் 27 – மே 3 – திரைப்படங்கள்

Read Next

கின்னஸ் சாதனை புரிந்த ‘மானாட மயிலாட’…