முழு நேர நடிகராக மாறிய கலை இயக்குநர் டி.ஆர்.கே. கிரண்

‘திருதிரு துறுதுறு’ படத்தின் மூலம் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமானவர் டி.ஆர்.கே. கிரண். தொடர்ந்து “கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி, வாமணன், முப்பொழுதும் உன் கற்பனைகள், இரண்டாம் உலகம்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் கலை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.

அவ்வப்போது சிறுசிறு வேடங்களிலும் நடித்து வந்த கிரண், இப்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார். விஷாலின் ‘பாயும் புலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், சி.வி.குமார் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் பெயரிடப்படாத படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜீவா, நயன்தாரா நடிக்க ராம்நாத் இயக்கும் ‘திருநாள்’, வேல்ராஜ் இயக்க தனுஷ், சமந்தா நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2′ படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் சின்னத்திரையில் கலை இயக்குநராக பணியை தொடங்கியவர் கிரண். 1500-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

Inimey Ippadithan – Official Trailer

Read Next

மற்றவர்களுக்காக வாழப் போகிறேன் – சிம்பு உருக்கம்