விக்ரம் நடித்து வெற்றி பெற்ற ‘ஸ்கெட்ச்’ படத்தைத் தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் ‘கள்ளபார்ட்’ படத்தை மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்கள்.
‘என்னமோ நடக்குது, அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைக்கிறார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்ற படத் துவக்க விழாவில் பா.ரங்கநாதன்.எம்.எல்.ஏ, தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
வசனம் – ராதாகிருஷ்ணன்
ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா
இசை – நிவாஸ் கே.பிரசன்னா
கலை – மாயபாண்டி
எடிட்டிங் – இளையராஜா
ஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – வி.ராமச்சந்திரன்
தயாரிப்பு – எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்.
திரைக்கதை, இயக்கம் – ராஜபாண்டி.