மயக்கப் போகும் ‘இது என்ன மாயம்’…

‘கிரீடம்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த ‘சைவம்’ படம் வரை படத்திற்குப் படம் வித்தியாசமான கதைகளை இயக்கி வரும் விஜய்யின் இயக்கத்தில் இந்த வாரம் வெளிவர உள்ள படம் ‘இது என்ன மாயம்’.

மேஜிக் பிரேம்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், நவ்தீப், நாசர், அம்பிகா, ஆர்ஜேக்கள் பாலாஜி, பாலாஜி, அஜய், லொள்ளு சபா ஜீவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் விஜய் கூறியதாவது,

“நம்ம வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு விஷயம் கவர்ந்திருக்கும். பையனா இருந்தால் பொன்னு அட்ராக்ட் பண்ணியிருப்பாங்க. பொன்னா இருந்தா பையன் அட்ராக் பண்ணியிருப்பாங்க. அப்படியெல்லாம் இல்லைன்னு யாராவது சொன்னாங்கன்னா அது பொய்.

அப்படி நம்மளைக் கவர்ந்த நம்மோட முன்னாள் காதலி நம் வாழ்க்கையில மீண்டும் வந்தால் என்ன நடக்கும். நாம எப்படி இருப்போம், அவங்க வாழ்க்கை எப்படி ஆகும். இப்படி காலேஜ் படிக்கும் போது காதலிச்ச இரண்டு பேர், ஒரு ஆறு வருஷம் கழிச்சி மீண்டும் சந்திச்சால் என்ன ஆகும்கறதுதான் இந்தப் படத்தோட கதை.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஒவ்வொருத்தரும் அவங்களோட வாழ்க்கையைக் கடந்து போற ஞாபகம் வரும்.

இந்தப் படத்துக்கு ஹீரோவா விக்ரம் பிரபு ஒப்பந்தம் ஆனவுடனே கொஞ்சம் ரெஸ்பான்சிபிள் அதிகமாகிடுச்சி. அவர் அப்பா பிரபு சார் கூட பார்த்துக்குங்கன்னு சொல்லும் போது இன்னும் கூடுதல் கவனம் வந்துடுச்சி.

கொச்சில 2009ல நடக்கிற காதல் கதை அப்புறமா 5 வருஷம் கழிச்சி மீண்டும் வரும் போது அந்தக் காதல் அப்படியே இருக்குமா, பிரிந்தவர்கள் மீண்டும் சேருவார்களா, அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதுதான் ‘இது என்ன மாயம்’.

காதல் படம் பார்த்து ஃபீல் பண்ணி ரொம்ப நாளாச்சின்னு நினைக்கிறவங்க இந்தப் படத்தைப் பார்த்தால் ரொம்பவே ஃபீல் பண்ணி ரசிப்பாங்க,” என்கிறார் இயக்குனர் விஜய்.

Read Previous

அழகான காதல் கதையுடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’

Read Next

தெலுங்கிலும் வசூலைக் குவிக்கும் ‘ஜில்லா’…