விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் இன்று (5 ஆகஸ்ட் 2019) நடிகர் சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டார்.
கடந்த வாரம் மீரா மிதுன், சேரன் சம்பந்தப்பட்ட சண்டையில், கமல்ஹாசன் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பதைப் பற்றிப் பேசிய போது, சரவணன், கல்லூரியில் படித்த போது பெண்களை உரசுவதற்காக பேருந்தில் சென்றுள்ளேன் என்ற பொருள்படி பேசினார்.
அப்படிப் பேசியதற்கு பின்னர் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் கூட முடிந்தநிலையில், இன்றைய நிகழ்ச்சியின் கடைசியில், கன்பெஷன் ரூமுக்கு நடிகர் சரவணனை அழைத்த பிக் பாஸ், பெண்களைப் பற்றித் தவறாகப் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதாக தெரிவித்து, அவரை அப்படியே வெளியே வரவழைத்தனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் அவருடைய நெருங்கிய நண்பர்களான கவின், சாண்டி உள்ளிட்டவர்களுக்கும், மற்ற போட்டியாளர்களுக்கும் கூட வீட்டுக்குள் சென்று விடை பெறக் கூட முடியாமல் அவர் அப்படியே வெளியேறியுள்ளதாகத் தெரிகிறது.
எலிமினேஷனில் வெளியேற்றப்படாத காரணத்தால் அவர் வெளியேறும் போது கமல்ஹாசனிடம் கூட பேசிவிட்டுச் செல்ல முடியாது. கமல்ஹாசன் சொன்ன ஒரு உதாரணத்திற்கு நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர் இளம் வயதில் செய்த ஒரு விஷயத்தை சொல்லி மாட்டிக் கொண்டு இப்போது வெளியேறியிருக்கிறார் சரவணன்.
சரவணன் வெளியேறியது மற்ற போட்டியாளர்களுக்கு எப்படி இருந்தது என்பது நாளைய நிகழ்ச்சியில்தான் தெரிய வரும்.